ஐ.பி.எல். இறுதிப் போட்டி குஜராத் வெற்றி மோசடியா...? சுப்பிரமணியசாமி டுவிட்டால் பரபரப்பு


ஐ.பி.எல். இறுதிப் போட்டி குஜராத் வெற்றி மோசடியா...? சுப்பிரமணியசாமி டுவிட்டால் பரபரப்பு
x

ஐ.பி.எல். இறுதிப் போட்டி குஜராத் வெற்றி மோசடியா...? சுப்பிரமணியசாமி டுவிட்டால் பரபரப்பு

புதுடெல்லி:

சமீபத்தில் நடந்த 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்த சீசனில்தான் அந்த அணி அறிமுகமானது.

இந்த நிலையில் ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் முடிவு மோசடி செய்து மாற்றப்பட்டதாக பா.ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலான கருத்துக்கள் இருக்கின்றன. அமித்ஷா வின் மகன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக இருப்பதால் அரசு விசாரிக்காது. இவ்விவகாரத்தில் தெளிவு படுத்துவதற்கு பொதுநல வழக்கு தாக்கல் செய்வது அவசியமாக இருக்கலாம் என்று கூறி உள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணிய சுவாமியின் இந்த டுவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


IPL Fraud Subramanian Swamy


Next Story