அபுதாபியில் முதலீட்டாளர்கள் மாநாடு: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செல்ல மத்திய அரசு தடை


அபுதாபியில் முதலீட்டாளர்கள் மாநாடு: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செல்ல மத்திய அரசு தடை
x

அபுதாபி செல்வதற்காக முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தார்.

திருவனந்தபுரம்,


ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை மந்திரி அழைப்பு விடுத்து இருந்தார்.


இதையடுத்து அபுதாபி செல்வதற்காக முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த மனுவை ஆய்வு செய்தார். பின்னர், முதல்-மந்திரி கலந்து கொள்ளும் அளவுக்கு அந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல எனக்கூறி பினராயி விஜயனின் அபுதாபி பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி மறுத்துள்ளது.


Next Story