சர்வதேச யோகா தினம் : பிரதமர் மோடியின் சிறப்பு மணல் சிற்பத்தை அமைத்த சுதர்சன் பட்நாயக்
சிறப்பம்சமாக சிற்பத்தில் பிரதமர் மோடி யோகா செய்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒடிசா,
உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா பயிற்சி நடந்து வருகின்றன. நாடு முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்து உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் இன்று காலை நடைபெற்ற பிரமாண்ட யோகா நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த நிலையில் ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏழு அடி மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.
சிற்பத்தின் கருப்பொருளாக யோகாவின் 12 ஆசனங்களின் வரிசை அந்த சிற்பத்தில் இடம்பெற்றுள்ளது . சிறப்பம்சமாக சிற்பத்தின் மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் சுதர்சன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.