காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை
வனத்துறை அதிகாரியை கொன்ற காட்டு யானை, முதுகில் காயத்துடன் சுற்றித்திரிகிறது. அதன் அருகில் செல்ல வனத்துறையினர் தயங்கி வருகிறார்கள்.
ஹாசன்:
வனத்துறை அதிகாரியை கொன்ற காட்டு யானை, முதுகில் காயத்துடன் சுற்றித்திரிகிறது. அதன் அருகில் செல்ல வனத்துறையினர் தயங்கி வருகிறார்கள்.
காயத்துடன் சுற்றும் காட்டு யானை
ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த காட்டு யானை வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் என்பவரை தாக்கி கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அந்த காட்டு யானை முதுகில் காயத்துடன் வனப்பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது. மேலும் ஆக்ரோஷமாகவும் இருந்து வருகிறது.
சிகிச்சை அளிக்க முடிவு
இதனால் அந்த காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால், அந்த காட்டு யானை ஆக்ரோஷமாக சுற்றித்திரிவதால் அதன் அருகே செல்ல வனத்துறையினர் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. நேற்று முன்தினம் அந்த காட்டு யானை காபி தோட்டத்தில் காயத்துடன் நடக்க முடியாமல் சுற்றித்திரிந்தது.
இந்த நிலையில் வனத்துறையினர், அந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளனர்.