இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.3% ஆக குறைவு - இந்திய பொருளாதார ஆய்வு மையம் தகவல்


இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.3% ஆக குறைவு - இந்திய பொருளாதார ஆய்வு மையம் தகவல்
x

ஏப்ரல் மாத நிலவரப்படி பட்டதாரிகள் வேலையின்மை விகிதம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 54.2% ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஜூன் மாதத்தில் 7.8% ஆக இருந்த வேலையின்மை விகிதம், ஜூலை 15-ந்தேதி நிலவரப்படி 7.3% ஆக குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார ஆய்வு மையம் கூறியுள்ளது.

கொரோனாவிற்கு முன்பு 2019-ல் பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 14.9% ஆக இருந்தது. அதன் பின்னர், 2020-ல் 15.1% ஆக அதிகரித்து, 2021-ல் 19.3% ஆக உச்சமடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் 17.8% ஆக குறைந்துள்ளது.

பட்டதாரிகள் வேலையின்மை விகிதம், கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 54.2% ஆகவும், பீகாரில் 34.2% ஆகவும், ஆந்திர பிரதேசத்தில் 33.6% ஆகவும், அரியானாவில் 32.4% ஆகவும், கேரளாவில் 23.8% ஆகவும் உள்ளது.

அதே சமயம் பட்டதாரிகள் வேலையின்மை விகிதம் மிக குறைந்த அளவில் குஜராத்தில் 4.8% ஆக உள்ளது. அதை தொடர்ந்து கர்நாடகாவில் 6.1% ஆகவும், ஒடிசாவில் 8.9% ஆகவும், மத்திய பிரதேசத்தில் 9.1% ஆகவும், மராட்டிய மாநிலத்தில் 9.4% ஆகவும் உள்ளது.

ஜூன் மாத நிலவரத்தின்படி, அனைத்து பிரிவினருக்குமான வேலையின்மை விகிதம் அதிகபட்சமாக அரியானாவில் 30.6% ஆகவும், ராஜஸ்தானில் 29.8% ஆகவும், அசாமில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் 17.2% ஆகவும், பீகாரில் 14% ஆகவும், சிக்கிமில் 12.7% ஆகவும், ஜார்கண்டில் 12.2% ஆகவும், தமிழகத்தில் 2.1% ஆகவும், மத்திய பிரதேசத்தில் 0.5% ஆகவும், புதுச்சேரியில் 0.8% ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story