இந்தியாவில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு!


இந்தியாவில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு!
x

இந்தியாவில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017-18ம் ஆண்டில் 6% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்து வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2018-19ம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8% ஆகவும், தொடர்ந்து 2019-20ல் 4.8% ஆக குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 2020-21ம் ஆண்டில் 4.2% ஆக குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 2021-22ம் ஆண்டில் 4.1% ஆகவும், 2022-23ல் 3.2% ஆகவும் குறைந்து வந்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் கூறியுள்ளது.

மேலும் கடந்த 6 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.3%ல் இருந்து 2.4% ஆகவும், நகர்ப்புறங்களில் 7.7%ல் இருந்து 5.4% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலங்களில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1%ல் இருந்து 3.3% ஆக குறைந்துள்ளது. அதே போல் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.6%ல் இருந்து 2.9% ஆக குறைந்திருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.


Next Story