2022-23 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி
2022-23 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் முடிவு அடைந்த 2022-23 நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 6.1 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) கண்ட 4.5 சதவீத வளர்ச்சியை காட்டிலும் அதிகம் ஆகும்.
2022-23 நிதி ஆண்டில் நாடு 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது எதிர்பார்ப்பை விட அதிகம் ஆகும். 7 சதவீத பொருளாதார வளர்ச்சிதான் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
முந்தைய 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 9.1 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டிருந்தது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் என்.எஸ்.ஓ. இந்தத் தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story