அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய எக்ஸ்.பி.பி.1.5 புதிய வகை கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டது
அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய எக்ஸ்.பி.பி.1.5 என்ற புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆமதாபாத்,
அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய எக்ஸ்.பி.பி.1.5 என்ற புதிய வகை கொரோனா தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. எக்ஸ்.பி.பி.1.5 என்ற புதிய வகை வைரஸ் ஒமைக்ரானின் துணை வைரசாகும்.
இது நியூயார்க்கில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்புக்கு காரணம் என சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த புதிய வகை வைரசானது முந்தைய வகை கொரோனவை விட 120 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் எக்ஸ்.பி.பி.1.5 என்ற புதிய வகை வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சீனாவில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரானின் பிஎப்.7 அக்டோபரில் இந்தியாவில் பரவியது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story