'இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனநாயக திருவிழா கொண்டாடப்பட உள்ளது' - பிரதமர் மோடி


இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனநாயக திருவிழா கொண்டாடப்பட உள்ளது - பிரதமர் மோடி
x

சுமார் 100 கோடி வாக்காளர்கள் ஜனநாயக திருவிழாவைக் கொண்டாடுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கோவா,

கோவாவில் ஜூன் 19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் ஜி-20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகள் கோவா வந்துள்ளனர். உலக அளவில் சுற்றுலாத்துறையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதித்து தீர்வு காண்பதே இந்த ஜி20 கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்த ஜி-20 கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பயங்கரவாதம் நம்மை பிரிக்கிறது, ஆனால் சுற்றுலா ஒன்றுபடுத்துகிறது. உண்மையில், சுற்றுலா அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, இணக்கமான சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இந்தியா பண்டிகைகளின் தேசம். நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கோவாவில், 'சாவ் ஜோவா' திருவிழா விரைவில் வரவிருக்கிறது. மேலும் ஜனநாயகத்தின் தாயகமாக விளங்கும் இந்தியாவில் நீங்கள் பார்க்க வேண்டிய 'ஜனநாயகத்தின் திருவிழா' ஒன்று உள்ளது.

அடுத்த ஆண்டு, இந்தியா தனது அடுத்த பொதுத் தேர்தலை நடத்தவுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக, ஏறக்குறைய 100 கோடி வாக்காளர்கள் இந்த விழாவைக் கொண்டாடி, ஜனநாயகத்தின் மீது இருக்கும் தங்களுடைய நிலையான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவார்கள்."

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story