இந்தியா-வியட்நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய வெளியுறவு அமைச்சகம்


இந்தியா-வியட்நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது:  மத்திய வெளியுறவு அமைச்சகம்
x

இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

புதுடெல்லி,

வியட்நாமின் பிரதமர் பாம் மின் சின் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர், பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தலைநகர் டெல்லியில் இருவரும் சேர்ந்து கூட்டாக, வியட்நாமின் நா திராங் பகுதியில் உள்ள டெலி-கம்யூனிகேசன்ஸ் பல்கலைக்கழகத்தில் ராணுவ மென்பொருள் பூங்காவை இன்று தொடங்கி வைத்தனர்.

இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாடுகளின் தரப்பிலும் கையெழுத்திடப்பட்டன.

இந்நிலையில், அவருடைய வருகையை பற்றி மத்திய வெளிவிவகார துறை செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மஜும்தார் இன்றிரவு பேசும்போது, இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த தூணாகும் என குறிப்பிட்டார்.

இரு நாடுகளை சேர்ந்த தலைவர்களும், ஆலை உற்பத்தி சார்ந்த ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அங்கீகாரம் தெரிவித்து உள்ளனர் என்றார். உண்மையில், பாதுகாப்பு தொழிற்சாலைக்கான ஒத்துழைப்பானது, ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உருவெடுத்து வருகிறது என்று ஜெய்தீப் கூறியுள்ளார்.

பாதுகாப்பு உற்பத்தி சார்ந்த ஒத்துழைப்புகளை அமல்படுத்துவதற்கான ஏற்பாட்டிற்கு இரு நாடுகளும் கையெழுத்திட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story