ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் சிறப்பு கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!


ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் சிறப்பு கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!
x

ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் சிறப்புக் கூட்டத்தை இந்தியா முதன்முறையாக நடத்தவுள்ளது.

மும்பை,

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டம் (அக்டோபர் 28)இன்றும் நாளையும் மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறுகிறது.

'புதிய தொழில்நுட்பங்களை(வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்) பயங்கரவாத நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தடுத்தல்' என்பது இந்த கூட்டத்தின் மையப்பொருளாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் சிறப்புக் கூட்டத்தை இந்தியா முதன்முறையாக நடத்தவுள்ளது.

மேலும், பயங்கரவாதிகளால் இணையம், புதிய கட்டண முறை மற்றும் டிரோன்கள்(ஆளில்லா விமானங்களை) பயன்படுத்துவதை தடுத்தல் மற்றும் கையாள்வது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும்.பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இந்த கூட்டம் தொடங்கும்.

இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் கிளேவர்லி உள்ளிட்ட வெளியுறவு மந்திரிகள் பலர் இந்தியாவில் நடைபெறும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


Next Story