புதிய தேசிய கல்விக்கொள்கை, சர்வதேச அளவில் மாணவர்களை ஈர்க்கும் - மத்திய மந்திரி சுபாஸ் சர்க்கார்


புதிய தேசிய கல்விக்கொள்கை, சர்வதேச அளவில் மாணவர்களை ஈர்க்கும் - மத்திய மந்திரி சுபாஸ் சர்க்கார்
x

புதிய தேசிய கல்விக்கொள்கை, சர்வதேச அளவில் மாணவர்களை ஈர்க்கும் என்று மத்திய கல்வித்துறை ராஜாங்க மந்திரி சுபாஸ் சர்க்கார் தெரிவித்தார்.

புதிய தேசிய கல்விக்கொள்கை

கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சபையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வித்துறை ராஜாங்க மந்திரி சுபாஸ் சர்க்கார் கலந்து கொண்டார். அப்போது அவர் புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து கூறியதாவது:-

மத்திய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இது, சர்வதேச அளவில் மாணவர்களைக் கவரும். இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக மாற்றும். இந்த கல்வி முறை, சமத்துவ கல்விக்கு வழிநடத்தும்; ஆசிரியர்கள் தன்னாட்சிக்கு வழிநடத்தும் ஒரு உத்வேகம் ஆகும்.

நெகிழ்வான பாடத்திட்டம்

ஆசிரியர்களுக்கும், சர்வதேச மாணவர்களுக்கும் தேவை உள்ளது. இந்த வாய்ப்புகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நாடு செயல்பட வேண்டும்.

சர்வதேச மாணவர்களுக்கு உதவுவதற்காகவும், தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காகவும் மத்திய அரசு ஒரு அமைப்பை அளிக்கிறது. புதிய கல்விக்கொள்கையை உருவாக்கிய பிறகு, நெகிழ்வான பாடத்திட்டம் மற்றும் கல்வி முறை மூலம் மாற்றங்களை கொண்டு வருவதில் மத்திய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது.

புதிய வடிவம்

தேசிய கல்விக்கொள்கையானது, இந்தியாவில் கல்வி முறையில் ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்கும். முழுமையான கல்வியைத் தரும்.

ஒரே பாரதம் புகழ் பாரதம் என்ற திட்டம் கொண்டு வந்துள்ளதால் இந்தியாவுக்கு இந்த ஆண்டு மிக முக்கியமானது. கல்விமுறையை சர்வதேச அளவிலானதாக மாற்றுவதிலும், உயர் தரமான கல்வியை வழங்குவதிலும் மத்திய அரசு முக்கிய பங்கு ஆற்றி வருகிறது.

உலக அளவில், உயர்வான கல்வியை, நியாயமான கட்டணத்தில் அளித்து கல்வித்துறையில் இந்தியாவை வல்லரசு ஆக்குவதுதான் மத்திய அரசின் திட்டம் ஆகும்.

அதிகளவிலான கற்ற இளைஞர்களுடன், அறிவு மையமாக மாறுவதற்கான வளத்தை கொண்டிருப்பதோடு மட்டுமின்றி, முன்னோக்கி அழைத்துச்செல்வதற்கான திறன் தலைநகராகவும் மாறுகிற வளமும் நமது நாட்டுக்கு உள்ளது.

இது, உலகளவிலான கல்வியின் மூலம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story