இந்தியாவில் புதிதாக 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. நேற்று முன்தினம் 801 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று புதிதாக 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 83 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 8 பேர் பலியாகினர். நேற்று பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது. இன்று பலி எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. இதில் கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்ததும் அடங்கும். இதுவரை தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 13,037 ஆக இருந்தநிலையில் இன்று 11,393 ஆக குறைந்தது.
சுகாதார அமைச்சகத்தில் அறிக்கையின்படி, நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாட்டில் இதுவரை 220.66 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.