டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது - சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குனர் பாராட்டு


டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது - சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குனர் பாராட்டு
x

இந்தியா டிஜிட்டல் மயமாக்கலில் முன்னணியில் திகழ்வதாக சர்வதேச நாணய நிதிய ஆசிய பசிபிக் துறையின் துணை இயக்குனர் கூறினார்.

வாஷிங்டன்,

இந்தியா டிஜிட்டல் மயமாக்கலில் முன்னணியில் திகழ்வதாக சர்வதேச நாணய நிதிய ஆசிய பசிபிக் துறையின் துணை இயக்குனர் அன்னர்-மேரி குல்டே-வுல்ப் கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணியில் உள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட இது புதுமைகளை அதிகரித்துள்ளது. இது நிர்வாகத் தடைகள் சிலவற்றைக் கடந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் டிஜிட்டல் மயமாக்கல் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க டிஜிட்டல் மயமாக்கல் ஒரு சிறந்த வழி. டிஜிட்டல் மயமாக்கலில் முன்னணியில் இருந்த நிறுவனங்கள் உண்மையில் சிறப்பாகச் செயல்பட்டன.

சில சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கல் எப்படி உதவுகிறது என்ற ஆய்வு செய்யப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் இதற்கான தொழில்நுட்ப உதவிகளை அதிகளவில் வழங்கி வருகிறது.

இந்த விஷயத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமாக சர்வதேச நாணய நிதியமும் செயல்படுகிறது.அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணியில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுநோய் காலத்தின்போது, பொதுமக்களுக்கு உதவி மற்றும் சேவைகளை விநியோகிக்கவும் இது பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தார்.


Next Story