இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு


இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு
x

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் ேபாட்டி நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களின் வசதிக்காக பெங்களூரு நகரில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது பசுமை மற்றும் ஊதா நிற வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இரவு 11.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுவாக மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று கப்பன் பார்க் மற்றும் எம்.ஜி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒருநாள் செல்லுபடியாகும் காகித டிக்கெட் வினியோகிக்கப்பட உள்ளது. அதன் விலை ரூ.50 ஆகும். அந்த காகித டிக்கெட் மூலம் எந்த ரெயில் நிலையங்களுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அத்துடன் திரும்பி வருவதற்கான (ரிட்டன்) காகித டிக்கெட்டையும் முன்கூட்டியே எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story