சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்; பதற்றம் நிலவுவதால் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்


சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்; பதற்றம் நிலவுவதால் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்
x

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் சாம்ராஜ் பேட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

பெங்களூரு:

உதவி கமிஷனர் தேசிய கொடியை...

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் முதல் முறையாக ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின்போது தேசிய கொடி ஏற்றுவற்காக இருதரப்பினர் இடையே வார்த்தை மோதல் உருவானது.

ஆனால் அரசு சார்பிலேயே ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதுடன், தேசிய கொடியும் ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வருகிற 15-ந் தேதி ஈத்கா மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாநகராட்சியின் வடக்கு மண்டல உதவி கமிஷனர், தேசிய கொடி ஏற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினவிழா அரசு சார்பில் கொண்டாடப்படுவதாக அறிவித்துள்ளதால் அங்கு பதற்றமான நிலை உருவாகி உள்ளது.

300 போலீசார் அணிவகுப்பு

இதையடுத்து, ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலையில் சாம்ராஜ்பேட்டை, திப்புநகர், வால்மீகி நகர் பகுதிகளில் மேற்குமண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். நகர ஆயுப்படை, கா்நாடக ஆயுதப்படை, மேற்கு மண்டல போலீசார் என 300-க்கும் மேற்பட்டோர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனா்.

ஈத்கா மைதானத்தில் முதல் முறையாக சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதால், அங்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய கொடியை ஏந்தியபடி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி யாராவது அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி எச்சரித்துள்ளார்.


Next Story