தட்சிண கன்னடா மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு


தட்சிண கன்னடா மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2022 12:30 AM IST (Updated: 16 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தட்சிண கன்னடா மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னரும் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரி டாக்டர் கிஷோர் குமார் கூறியதாவது:-

மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இனி தீபாவளி, கிறிஸ்துமஸ் என்று பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. அதனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தொடர் மழை மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story