ராமர் கோவில் திறப்பு விழா - பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை
விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மும்பை,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ந்தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 22-ந்தேதியன்று பங்குச் சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
22ம் தேதி அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று (சனிக்கிழமை) பங்குச் சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.