சிவமொக்கா நகரில், தேசியகொடியுடன் இருசக்கர வாகன பேரணி; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, ராகவேந்திரா எம்.பி. பங்கேற்பு


சிவமொக்கா நகரில், தேசியகொடியுடன் இருசக்கர வாகன பேரணி; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, ராகவேந்திரா எம்.பி. பங்கேற்பு
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி சிவமொக்கா நகரில் தேசியகொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, ராகவேந்திரா எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிவமொக்கா;

இருசக்கர வாகன பேரணி

75-வது சுதந்திரதின பவள விழாவையொட்டி நாடு முழுவதும் வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்ற மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணியும், சுதந்திரம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிவமொக்கா நகரில், 75-வது சுதந்திர தினத்ைதயொட்டி முன்னிட்டு பி.எச்.சாலை எம்.ஆர்.எஸ். சதுக்கத்தில் இருந்து இருசக்கர வாகன பேரணி நேற்று காலை நடைபெற்றது.

ஈசுவரப்பா, ராகவேந்திரா எம்.பி. பங்கேற்பு

இந்த பேரணியை முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இதைதொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் தேசியகொடி ஏந்திய நிலையில் பேரணியாக சென்றனர்.

இதேபோல் ஒரு ஸ்கூட்டரில் ஈசுவரப்பாவும், ராகவேந்திரா எம்.பி.யும் ஒன்றாக சென்றனர். அதாவது ஸ்கூட்டரை ஈசுவரப்பா ஓட்ட பின்னால் ராகவேந்திரா எம்.பி. தேசியகொடி ஏந்தியபடி சென்றனர்.

இந்த பேரணி, சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. பி.எச்.சாலை எம்.ஆர்.எஸ். சதுக்கத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பா.ஜனதா அலுவலகம் முன்பு வந்து நிறைவு பெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற இருசக்கர வாகனங்களுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல், கட்சி சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த பேரணியில் சிவமொக்கா மாநகராட்சி மேயர் சுனிதா அண்ணப்பா, துணை மேயர் சங்கர் கன்னி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story