மடிகேரியில் மழைக்கு சேதமடைந்த விளைநிலங்களை அதிகாரிகள் ஆய்வு; நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி
மடிகேரியில் மழைக்கு சேதமடைந்த விளைநிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
குடகு;
குடகு மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவ மழைக்கு ஏராளமான விளைபயிர்கள் நாசமானது. குறிப்பாக மடிகேரி தாலுகா சம்பாஜேவில் ஏராளமான விவசாய நிலங்கள் சேதமடைந்தது. இந்த இடங்களை குடகு மாவட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று மடிகேரி தாலுகா சம்பாஜே கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட அரிகல்லு, கல்லள்ளா, சடாவு மற்றும் கொய்நாடு ஆகிய பகுதிகளில் மழைக்கு சேதமடைந்த விளைநிலங்களை தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் சம்பந்தப்பட்ட விவசாயிகளை சந்தித்து, விளைபயிர்கள் பாதிப்பு குறித்த விவரங்களையும் பெற்று கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் உரிய நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story