கர்நாடகத்தில் 6 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்
கர்நாடகத்தில் 6 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதிகபட்சமாக வடகர்நாடக மாவட்டமான கலபுரகியில் 105.80 டிகிரி வெயில் கொளுத்தியது. கர்நாடகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் பின்வருமாறு:-
கார்வார் - 97.16 டிகிரி
மங்களூரு - 95.54 டிகிரி
பெலகாவி - 91 டிகிரி
பீதர் - 100.41 டிகிரி
விஜயாப்புரா - 102.20 டிகிரி
பாகல்கோட்டை - 96.08 டிகிரி
தார்வார் - 95 டிகிரி
கதக் - 98.24 டிகிரி
கலபுரகி - 105.80 டிகிரி
ஹாவேரி - 95 டிகிரி
கொப்பல் - 103.28 டிகிரி
ராய்ச்சூர் - 103.28 டிகிரி
பெங்களூரு - 91.04 டிகிரி
பெங்களூரு ஏர்போர்ட் - 91.94 டிகிரி
பல்லாரி - 102.56 டிகிரி
சிக்கமகளூரு - 86.36 டிகிரி
சித்ரதுர்கா - 95.18 டிகிரி
தாவணகெரே - 95.36 டிகிரி
ஹாசன் - 94.28 டிகிரி
சிந்தாமணி - 94.46 டிகிரி
மண்டியா - 95.36 டிகிரி
மடிகேரி - 85.1 டிகிரி
மைசூரு - 96.98 டிகிரி
சிவமொக்கா - 94.64 டிகிரி