சிக்கமகளூருவில், இருவேறு இடங்களில் விபத்துகளில் சிக்கி 2 வாலிபர்கள் பலி


சிக்கமகளூருவில், இருவேறு இடங்களில் விபத்துகளில் சிக்கி 2 வாலிபர்கள் பலி
x

சிக்கமகளூருவில், இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா சன்னாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா (வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி ஒன்று, ராகவேந்திரா சென்ற கார் மீது மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி ராகவேந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஜ்ஜாம்புரா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல சிக்கமகளூரு (மாவட்டம்) கடூர் தேசிய நெடுஞ்சாலையில் முகமது சாரிக் (38) என்பவர், தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முகமது சாரிக், சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கடூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த முகமதுவின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story