பீகாரில் விவசாய சங்கத்தினர் சட்டமன்றம் நோக்கி பேரணி - தடியடி நடத்தி கலைத்த போலீசார்


பீகாரில் விவசாய சங்கத்தினர் சட்டமன்றம் நோக்கி பேரணி - தடியடி நடத்தி கலைத்த போலீசார்
x

பேரணி நடத்த முயன்ற விவசாய சங்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்னா,

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள கர்தானிபாக் பகுதியில் விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாய சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை முன்நிறுத்தி சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.

இதையடுத்து பேரணி நடத்த முயன்ற விவசாய சங்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story