அனைத்து மதங்களிலும், பெண்களுக்கான அனைத்து தனி சட்டங்களும் சம அளவில் இருக்க வேண்டும்: ரேகா சர்மா


அனைத்து மதங்களிலும், பெண்களுக்கான அனைத்து தனி சட்டங்களும் சம அளவில் இருக்க வேண்டும்:  ரேகா சர்மா
x

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஒருவர் பராமரிப்பு தொகையை கேட்டு பெற உரிமை உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது.

புதுடெல்லி,

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறும்போது, பெண்களுக்கான உரிமைகள் எப்போதும் உலகம் முழுவதும் பொதுவாக இருக்க வேண்டும். மத அடிப்படையில் அது தீர்மானிக்கப்பட கூடாது. அனைத்து மதங்களிலும், பெண்களுடன் தொடர்புடைய அனைத்து தனி சட்டங்களும் சம அளவில் இருக்க வேண்டும்.

இந்து திருமண சட்டத்தின் கீழ், விவாகரத்துக்கு பின்னர் நீங்கள் ஜீவனாம்சம் பெற முடியும். அப்படியென்றால், முஸ்லிம் பெண் ஒருவர் ஏன் அதனை பெற கூடாது? சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜூன் 10-ந்தேதி வெளியான தீர்ப்பில், குற்ற நடைமுறை சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஒருவர் பராமரிப்பு தொகையை கேட்டு பெற உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நாட்டின் மதசார்பற்ற சட்டங்களின் கீழ், ஜீவனாம்ச விவகாரங்களில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான எந்தவித வேற்றுமைகளும் பிற்போக்குத்தனம் வாய்ந்தது. அது, பாலின நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்து இருந்தது.

அப்போது ரேகா சர்மா கூறும்போது, சட்டத்தின் கீழ் எந்தவொரு பெண்ணும் ஆதரவு இன்றியோ மற்றும் பாதுகாப்பு இன்றியோ விடப்பட கூடாது என்ற கொள்கையை சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பானது மீண்டும் வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அனைத்து மதங்களிலும், பெண்களுடன் தொடர்புடைய அனைத்து தனி சட்டங்களும் சம அளவில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story