தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி


தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 16 Oct 2022 12:30 AM IST (Updated: 16 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில், தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தம்பதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு;


போலி நகைகள்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பகுதியில் வசித்து வருபவர் ஹஸ்திமல் பர்மர். இவரது மனைவி சங்கீதா. இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 795 கிராம் நகைகளை அடகு வைத்துள்ளனர். அப்போது அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் அந்த நகைகளை பரிசோதிக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து அதிகாரிகள் அடகு வைத்த நகைகளுக்காக அவர்களுக்கு ரூ.27 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். அந்த பணத்தை பெற்று கொண்டு அவர்கள் அங்கிருந்தது சென்றுவிட்டனர். இதையடுத்து வெகு நாட்கள் ஆகியும் அடகு வைத்த நகைகளுக்கு அவர்கள் வட்டி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.

நோட்டீசு

இதுகுறித்து நிதி நிறுவன அதிகாரிகள் அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர்களின் செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் கடனுக்காக வட்டி தொகையை செலுத்துமாறு அவர்களுக்கு நோட்டீசு அனுப்பினர். ஆனாலும் கூட அவர்கள் வட்டியை செலுத்தவில்லை என தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்கள் அடகு வைத்த நகைகளை பரிசோதித்தனர். அப்போது அந்த நகைகள் போலியானது என்பது ெதரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே கடன்தொகை முழுவதையும் திருப்பி செலுத்துமாறு மீண்டும் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பினர்.

தம்பதிக்கு வலைவீச்சு

மேலும் அவர்களின் கடன்தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ.30 லட்சம் வரை வந்துள்ளது. பணம் செலுத்த தவறியதால் அதிகாரிகள் உடனே இதுகுறித்து மங்களூரு தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து தம்பதியை வலைவீசி தேடிவருகின்றனா்


Next Story