தங்கம் மீதான இறக்குமதி வரி 15% ஆக உயர்வு


தங்கம் மீதான  இறக்குமதி வரி 15% ஆக உயர்வு
x

இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

தங்கம் மீதான இறக்குமதி வரி 15% ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக புள்ளி விவரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்திற்கான இறக்குமதி வரியை 10.75% இல் இருந்து 15% ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரி உயர்த்தப்பட்டுள்ளதால் இறக்குமதி குறைந்த இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story