பஞ்சரத திட்டம் அமல்படுத்துவது உறுதி


பஞ்சரத திட்டம் அமல்படுத்துவது உறுதி
x

ஜனதாதளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் பஞ்சரத திட்டம் அமல்படுத்துவது உறுதி என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூரு பசவனகுடி தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

பஞ்சரத திட்டம் அமல் உறுதி

பா.ஜனதா தலைவர்கள் ஏழைகளை பற்றி சிந்திப்பதே இல்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சி மட்டுமே விவசாயிகளையும், ஏழை மக்களையும் பற்றி சிந்திக்கிறது. அவர்களது வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்காக பஞ்சரத திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளேன். ஜனதா

தளம் (எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்ததும் பஞ்சரத திட்டங்களை உடனடியாக அமல்படுத்துவது உறுதி.

பெங்களூருவில் ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடுகள் பற்றி பா.ஜனதா எம்.பி, எம்.எல்.ஏ. கண்டு கொள்ளவில்லை. ஜனதாதளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு, உடனடியாக திரும்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் 2 முறை முதல்-மந்திரியாக இருந்த போது, பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி இருந்தேன்.

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு...

2006-ம் ஆண்டு பெங்களூருவில் 19 கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். பெங்களூருவில் தற்போது ஏராளமான குடும்பங்கள் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்கள். அவர்கள் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் கூறிய நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும்.

பெங்களூரு வளர்ச்சியில் தேவேகவுடாவின் பங்கும் மிகப்பெரியதாகும். மக்கள் எப்போதும் தங்களது மனதில் வைத்து கொள்ளும் திட்டம் என்னவென்றால், பெங்களூருவுக்கு காவிரி குடிநீர் கொண்டு வந்தது தேவேகவுடா தான். சிர்சி மேம்பாலம் உள்ளிட்ட பல வளர்ச்சி பணிகள் தேவேகவுடா முதல்-மந்திரியாக இருந்த போது தான் நடந்திருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story