தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவராக சீதாராம் நியமனம் - மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு


தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவராக சீதாராம் நியமனம் -  மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு
x

கவுகாத்தி ஐ.ஐ.டி.யின் இயக்குனர் டி.ஜி.சீதாராமை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவராக நியமித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவராக அனில் சஹஸ்ரபுத்தே இருந்து வந்தார். அவர் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதியுடன் ஓய்வுபெற்றார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) தலைவராக உள்ள ஜெகதீஷ்குமார், ஏ.ஐ.சி.டி.இ.யில் இடைக்கால பொறுப்பு வகித்தார்.

இந்த நிலையில் கவுகாத்தி ஐ.ஐ.டி.யின் இயக்குனர் டி.ஜி.சீதாராமை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவராக நியமித்து மத்திய கல்வி அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இவர் இந்த பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரையில் நீடிப்பார்.

சீதாராம் கவுகாத்தி ஐ.ஐ.டி.யின் இயக்குனராக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு அவர் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்சி.) சிவில் என்ஜினீயரிங் துறை பேராசிரியர், எரிசக்தி மற்றும் மெக்கானிக்கல் அறிவியல் துறை பேராசிரியர் என 27 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.


Next Story