லைக் செய்தால் பணம்... வஞ்சக வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல்


லைக் செய்தால் பணம்... வஞ்சக வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல்
x

வாட்ஸப் வாயிலாக ஒரு கும்பல் 22 லட்ச ரூபாய் வரையில் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளது.

லக்னோ,

வாட்ஸப் வாயிலாக ஒரு கும்பல் 22 லட்ச ரூபாய் வரையில் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோமதி நகரில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின்படி, பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ் அப் வாயிலாக எளிய முறையில் பணம் சம்பாதிப்பது தொடர்பாக ஒரு செய்தி வந்துள்ளது.

வெவ்வேறு இணையதளங்களை லைக் செய்வது மட்டும் தான் வேலை. பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அந்த மர்ம கும்பல் அவருக்கு 48 ஆயிரத்து 450 ரூபாய் சம்பளத்தைக் கொடுத்துள்ளது. அவர்கள் வலையில் அவர் விழுந்ததும், லட்சக்கணக்கில் முன் பணத்தை டெபாசிட் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி மர்ம கும்பல் ஏமாற்றியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் 22 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இழந்துள்ளார். அதன்பிறகு அந்த கும்பல் அவரின் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதை நிறுத்தியுள்ளது. இதேபோல மற்றொரு வழக்கும் பதிவாகியுள்ளது. குருகிராமில் உள்ள மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு மர்ம கும்பல் அளித்த வேலை யூடியூப்பில் வீடியோக்களை லைக் செய்வது. ஆனால் இதன் மூலம் அவர் 42 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story