எல்லையில் அமைதி இல்லையென்றால் இந்திய- சீன உறவுகள் இயல்பாக இருக்கமுடியாது: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு கோவாவில் நடைபெற்றது.
கோவா,
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இரு தினங்கள் கோவாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடர்ந்து இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சீன விவகாரம் குறித்து பேசுகையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு சாதாரணமாக இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் அமைதி இல்லாதவரை இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் இயல்பாக இருக்க முடியாது என்றும் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story