இமாசலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி பிரியங்கா வாக்குறுதி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
சிம்லா
இமாசலபிரதேசத்தில், 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள கங்க்ராவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
இமாசலபிரதேசத்தில் பா.ஜனதா அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே இம்முடிவு இறுதி செய்யப்படும்.
வீட்டிலும், வெளியிலும் வேலை செய்து பெண்கள் படும் சுமையை அறிவோம். எனவே, எல்லா பெண்களுக்கும் மாதத்துக்கு ரூ.1,500 நிதியுதவி அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதையும் முதல்-மந்திரி சபை கூட்டத்திலேயே இறுதி செய்வோம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பணம் இல்லை என்றும் பா.ஜனதா சொல்கிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய பணம் இருக்கிறது. அரசு ஊழியர் ஓய்வூதியத்துக்கு மட்டும் பணம் இல்லையா? எனவே, இவற்றையெல்லாம் ஆராய்ந்து, காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.