50 வழக்குகளை தீர்த்து வைத்தால், 100 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன- சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு
நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துவதாக ரிஜிஜு தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்தியா முழுவதும் சுமார் 5 கோடி வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது. இந்திய கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி ஒருவர் 50 வழக்குகளை தீர்ப்பளித்து முடித்து வைத்தால் , 100 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்துள்ளார்.
ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் செயல்பாடு குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய மந்திரி ரிஜிஜு, கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
5 கோடி மக்கள் தொகை கூட இல்லாத சில நாடுகள் இருக்கும் நிலையில் இந்தியாவில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
Related Tags :
Next Story