சித்ரதுர்கா மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவேன்-கலெக்டர் திவ்யா பிரபு பேட்டி


சித்ரதுர்கா மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவேன்-கலெக்டர் திவ்யா பிரபு பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று புதிய கலெக்டர் திவ்யா பிரபு தெரிவித்துள்ளார்.

சித்ரதுர்கா:

கலெக்டர் சாமி தரிசனம்

சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக பணியாற்றிய கவிதா மன்னிக்கேரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த அந்த இடத்திற்கு புதிய கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா பிரபு என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று தனது பொறுப்பை ஏற்று கொண்டார்.

இதையடுத்து அன்றைய தினம் மாலை அவர் நாயக்கனஹட்டியில் உள்ள திப்பேருத்ரசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது கலெக்டர் திவ்யா பிரபுவுக்கு மடாதிபதி பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கினார்.

மாவட்ட வளர்ச்சிக்கு..

இதையடுத்து கலெக்டர் திவ்யா பிரபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக பணியாற்றிய முதல் நாள் திப்பேருத்ரசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இது பெருமையாக இருக்கிறது. கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்திருப்பதாக உணர்கிறேன். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து செல்வேன். ஊழலுக்கு வாய்ப்பு அளிக்கமாட்டேன். பொது மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காணப்படும். சித்ரதுர்கா மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது துணை கலெக்டர் பாலகிருஷ்ணப்பா உள்பட பலர் உள்ளனர். சித்ரதுர்கா மாவட்ட புதிய கலெக்டராக பெறுப்பேற்றுள்ள திவ்யா பிரபு தமிழ்நாடு மதுரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story