5 ஆண்டுகள் சித்தராமையாவே முதல்-மந்திரி: வேணுகோபால் கூறியதை நான் சொன்னோன் - மந்திரி எம்.பி.பட்டீல் விளக்கம்


5 ஆண்டுகள் சித்தராமையாவே முதல்-மந்திரி: வேணுகோபால் கூறியதை நான் சொன்னோன் - மந்திரி எம்.பி.பட்டீல் விளக்கம்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக சித்தராமையாவே இருப்பார் என்று கூறியதில், வேணுகோபால் சொன்னதை தான் நான் கூறியதாக மந்திரி எம்.பி.பட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:

5 ஆண்டுகள் சித்தராமையாவே...

கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தாலும் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் 4 நாட்களுக்கு பின்பு டி.கே.சிவக்குமாரை சமாதானப்படுத்தி, முதல்-மந்திரி பதவியை சித்தராமையாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வழங்கி இருந்தனர். இருவரும் தலா 30 மாதங்கள் முதல்-மந்திரியாக இருப்பார்கள் என்ற தகவல் வெளியானது.

இதற்கிடையில், மைசூருவில் நேற்று முன்தினம் பேசிய மந்திரி எம்.பி.பட்டீல், காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளும் சித்தராமையாவே முதல்-மந்திரியாக இருப்பார் என்று கூறி இருந்தார். இது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், மோதலையும் உருவாக்கியது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மந்திரி எம்.பி.பட்டீலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

தனிப்பட்ட கருத்து தெரிவிக்கவில்லை

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி காங்கிரஸ் தலைமை முதல்-மந்திரியாக சித்தராமையாவை தேர்வு செய்துள்ளது. டி.கே.சிவக்குமார் ஒருவருக்கு மட்டுமே துணை முதல-மந்திரி பதவி வழங்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை டி.கே.சிவக்குமாரே கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பார் என்றும் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

வேணுகோபால் கூறியதை நான் சொன்னேன். முதல்-மந்திரி பதவியை பங்கிட்டு கொள்வது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. டெல்லியில் பேசும் போது அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாது என்று கூறி இருந்தார். அவர் சொன்னதன் மூலம் 5 ஆண்டுகள் சித்தராமையா முதல்-மந்திரியாக இருப்பார் என்று நான் சொல்லி இருந்தேன். என்னுடைய தனிப்பட்ட கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story