ஒலி பெருக்கிகருத்துக்கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை


ஒலி பெருக்கிகருத்துக்கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 29 இடங்கள் தான் கிடைக்கும் என சில கருத்துக்கணிப்புகளில் தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்புகளை பணம் வாங்கிக்கொண்டு சிலர் நடத்தி வெளியிடுகிறார்கள். இதில் எனக்கு நம்பிக்கை இல்லை. யாரும் இதை நம்ப வேண்டாம். என்னிடம் ஆள்பலம் இருந்தாலும் பண பலம் இல்லை. பா.ஜனதா, காங்கிரஸ் கட்சி போல் நான் கமிஷன் வாங்கி இருந்தால், கருத்துக்கணிப்பில் எங்களுக்கும் அதிகமான இடம் கிடைத்து இருக்கும்.

- எச்.டி.குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி

குமாரசாமி போல் அழுது நாடகமாட தெரியாது

குமாரசாமி என்னை நாடகமாடுகிறார் எனக் கூறுகிறார். அவருக்கு தான் நாடகம் ஆடும் வழக்கம் உள்ளது. தேர்தல் வந்துவிட்டால் அழுது நாடகமாடுவார். அவர்களை போல் என்னால் அழ முடியாது. கல்வீசி தாக்கப்பட்டதன் வேதனை எனக்கு தான் தெரியும். நான் இதில் நாடகமாடவில்லை. நான் மக்கள் முன் செல்கிறேன். அவர்களுக்கு தெரியும் யார் நாடகமாடுவார்கள் என்பது. என் மீது தாக்குதல் நடத்தி மிரட்ட முடியாது.

- ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் மூத்த தலைவர்

காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

சிக்கமகளூரு தொகுதியில் என்னை தோற்கடிக்க காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் உள் ஒப்பந்தம் செய்துள்ளன. என்னை தோற்கடிக்க நடக்கும் முயற்சியை நான் அபிமன்யுவாக அல்ல அர்ஜுனவாக இருந்து முறியடிப்பேன். காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள். அந்த இரு கட்சிகளும் சமுதாயத்தில் சாதி என்னும் விஷ விதைகளை விதைத்து வருகிறது. எங்கள் கட்சியின் கொள்கை இந்துத்துவா. இரட்டை என்ஜின் அரசின் சாதனையே வெற்றிக்கு காரணம்.

-சி.டி.ரவி, பா.ஜனதா பொதுச்செயலாளர்

எனக்கு சித்தராமையாவை தோற்கடிக்கும் பொறுப்பு

கடந்த தேர்தலில் பாதாமியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா அந்த தொகுதி மக்களை ஏமாற்றி விட்டார். தற்போது அவர் சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. லிங்காயத் தலைவர்கள் பற்றி காங்கிரசாருக்கு உரிமை இல்லை. பா.ஜனதா என்னை ஆட்சியில் இருந்து நீக்கவில்லை. நானே தாமாக முன்வந்து முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினேன்.

- எடியூரப்பா, பா.ஜனதா மூத்த தலைவர்

பா.ஜனதா அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்

பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் கர்நாடகத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ஆனால் ஆளும் பா.ஜனதா அரசு கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது. இந்த அரசு 40 சதவீத கமிஷன் அரசு. சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கும் இந்த பா.ஜனதா அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.

- ஜமீர் அகமதுகான், காங்கிரஸ் எம்.எல்.ஏ.


Next Story