கட்சியின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தலின் பேரில் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தேன் - மல்லிகார்ஜுன் கார்கே


கட்சியின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தலின் பேரில் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தேன் - மல்லிகார்ஜுன் கார்கே
x

கோப்புப்படம் 

கட்சியின் மூத்த தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் தான் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மல்லிகார்ஜுன் கார்கே, இன்று தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது ;

தலைவர் பதவிக்கு ஒருமித்த வேட்பாளரை வைத்திருப்பது மிகவும் நல்லது" என்று சசி தரூரிடம் கூறியதாகக் அவர் கூறினார். கட்சியின் மூத்த தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் தான் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தேர்தலில் போட்டியிட விரும்பாததால், எனது மூத்த சகாக்கள் என்னை தேர்தலில் போட்டியிடச் சொன்னார்கள். நான் யாருக்கும் எதிராகப் போராடவில்லை. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திற்காகப் போராடுகிறேன்.

சசி தரூர் பேசி வரும் நிலை மற்றும் மாற்றம் பற்றி பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும்.

மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளில் எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். எனது சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகளுக்காக நான் எப்போதும் போராடி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவராகவும், அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் பலமுறை இருந்துள்ளேன். நான் இப்போது மீண்டும் போராடி அதே நெறிமுறைகள் மற்றும் சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். என கூறினார்.


Next Story