'ஒரே நாடு, ஒரே தேர்தல்' வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எவ்வளவு செலவாகும்: தேர்தல் ஆணையம் மதிப்பீடு


ஒரே நாடு, ஒரே தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எவ்வளவு செலவாகும்: தேர்தல் ஆணையம் மதிப்பீடு
x

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ரூ.9,300 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது.

புதுடெல்லி,

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்துள்ள மத்திய அரசு, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேவையான தளவாட பொருட்கள் தேவை குறித்து ஆராயவும் கூறியுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

சட்டம் மற்றும் பணியாளர் துறை சார்ந்த நிலைக்குழு, ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான அறிக்கையை கடந்த 2015-ம் ஆண்டு உருவாக்கியது. அந்த அறிக்கையில், தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த ஆலோசனைகளை சேர்த்திருந்தது. அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள சிரமங்களை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. மேலும், கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் வாங்குவதற்கு சுமார் ரூ.9 ஆயிரத்து 300 கோடி தேவைப்படும் என்று தெரிவித்திருந்தது.


Next Story