பெங்களூருவில் 30 பேருடன் சென்ற அரசு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


அரசு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

நல்வாய்ப்பாக பஸ்சில் இருந்த 30 பயணிகளும் உடனடியாக வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு மெட்ரோ போக்குவரத்துக்கழகத்தால் 144ஈ வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ் 30 பயணிகளுடன் சிவாஜி நகர் நோக்கி இன்று காலை 9 மணி அளவில் மாநகரின் எம்.ஜி. சாலையில் அனில் கும்ப்ளே வளைவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ் தீப்பிடித்தது.

பஸ்சின் இன்ஜினில் இருந்து பற்றத் தொடங்கிய தீ, மளமளவென பஸ் முழுவதும் பரவியது. பஸ்சின் முன்பக்கத்திலிருந்து புகை வருவதைக் கண்ட நடத்துனர் உடனடியாக பஸ்சை விட்டுக் கீழே இறங்குமாறு வலியுறுத்தினார். உடனடியாக பஸ்சில் இருந்த 30 பயணிகள் வெளியேறினர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் பஸ்சின் இன்ஜின் மிகவும் வெப்பமாக இருந்ததால் பஸ் தீப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீப்பிடித்த பஸ் கோரமங்களா பணிமனைக்கு சொந்தமானது.


Next Story