காதல் விவகாரத்தில் வாலிபர் ஆணவக்கொலை; பெண்ணின் தந்தை கைது


காதல் விவகாரத்தில் வாலிபர் ஆணவக்கொலை; பெண்ணின் தந்தை கைது
x

காதல் விவகாரத்தில் வாலிபர் ஆணவக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் கலபுரகியில் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கலபுரகி:

காதல் விவகாரத்தில் வாலிபர் ஆணவக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் கலபுரகியில் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவுக்கு...

கலபுரகி டவுன் புறநகர் பகுதியில் ஒன்னகிரங்கி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் குருலிங்கப்பா(வயது 26). இவருக்கு, பக்கத்து வீட்டு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் காதலித்து வந்தனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள், குருலிங்கப்பாவை அழைத்து கண்டித்துள்ளனர். மேலும் கொலை செய்வதாகவும் மிரட்டி உள்ளனர். இதையடுத்து குருலிங்கப்பா, பெங்களூருவுக்கு வேலைக்காக சென்றார்.

எனினும் அவர், தனது காதலியுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் வீட்டிற்கு தெரிந்தது. உடனே அவர்கள் தங்கள் பெண்ணை எச்சரித்துள்ளனர். மேலும் காதலை கைவிடுமாறு கூறி உள்ளனர். அதற்கு இளம்பெண் மறுத்துள்ளார். இதற்கிடையே அவர் தனது காதலனை கிராமத்திற்கு வருமாறு கூறி அழைத்துள்ளார். அதன்படி குருலிங்கப்பா, பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கிராமத்திற்கு வந்தார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர், நேற்று முன்தினம் குருலிங்கப்பா மற்றும் அவரது சகோதரருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஆணவக்கொலை

அந்த சமயத்தில் பெண்ணின் தந்தை பசவராஜ், கற்கள், சுத்தியல் மற்றும் இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களால் குருலிங்கப்பாவையும், அவரது சகோதரரையும் தாக்கி உள்ளார். இதில் குருலிங்கப்பா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து குருலிங்கப்பாவின் உடலை, அவரது வீட்டின் முன்பு தூக்கில் தொங்கவிட்டனர். இதுகுறித்து உடனடியாக பர்ஹதாபாத் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தூக்கில் தொங்கிய குருலிங்கப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் விசாரணை நடத்தினர். விசாரணையில் மற்றொரு சமூகத்தை சேர்ந்த வாலிபர் தங்கள் மகளை காதலிப்பதை அறிந்த பெற்றோர், ஆத்திரமடைந்து அந்த வாலிபரை ஆணவப்படுகொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பெண்ணின் தந்தை பசவராஜை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story