இந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை தொடங்கிவைக்கும் உள்துறை மந்திரி அமித்ஷா..!
இந்தியாவில் முதல் முறையாக இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
போபால்,
இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இந்தியில் மருத்துவக் கல்வியை தொடங்கி வைக்கிறார் என அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். அப்போது இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை அமித்ஷா வெளியிடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு இந்தியில் கற்பிப்பது இதுவே முதல் முறை என சிவராஜ்சிங் சவுகான் பெருமிதமாக கூறியியுள்ளார். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்கவோ, கற்பிக்கவோ முடியாது என்ற எண்ணத்தை இது மாற்றும் எனவும், இந்தியில் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இது ஒரு படி எனவும் கூறியிருக்கிறார்.
ஒருவருடைய தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது தான் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானம் எனவும் சவுகான் குறிப்பிட்டுள்ளார்