இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி வழங்கப்படும்- ஆம் ஆத்மி வாக்குறுதி


இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி வழங்கப்படும்- ஆம் ஆத்மி வாக்குறுதி
x

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இந்த வாக்குறுதிகளை பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் வெளியிட்டார்.

சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மாணவர்களுக்கு இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

அனைத்துப் பள்ளிகளும் டெல்லியைப் போல் சிறந்ததாக மாற்றப்படும், தனியார் பள்ளிகள் சட்டவிரோதமாக கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கப்படாது, தற்காலிக ஆசிரியர்கள் முறைப்படுத்தப்படுவார்கள், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அளித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் இந்த அறிவிப்புகளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வெளியிட்டனர்.

இந்தியாவின் பல்வேறு மாநில அரசியல் களத்தில் களமிறங்க முயற்சிக்கும் ஆம் ஆத்மி கட்சி, தற்போது அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story