இடைக்கால பட்ஜெட்: இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்


தினத்தந்தி 1 Feb 2024 3:56 AM (Updated: 1 Feb 2024 9:27 AM)
t-max-icont-min-icon

தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.



Live Updates

  • 1 Feb 2024 5:28 AM

    இளைய தலைமுறையினர் மற்றும் பெண்களை மையப்படுத்திய திட்டங்கள் பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமராவதி எம்.பி நவ்னீத் ரானா கூறினார்.

     

  • 1 Feb 2024 5:10 AM



  • 1 Feb 2024 4:33 AM

    நாடாளுமன்றத்தில்   இடைக்கால பட்ஜெட்  சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

  • 1 Feb 2024 4:28 AM


    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டது

  • 1 Feb 2024 4:21 AM



  • 1 Feb 2024 4:19 AM

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார்.

  • 1 Feb 2024 4:12 AM

    ரெயில்களின் வேகத்தை அதிகப்படுத்தும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும்; நீண்டதூர ரயில்களில் கூடுதலாக தூய்மை பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். புறநகர் ரெயில்களிலும் தூய்மை பணிகளை மேம்படுத்த வேண்டும் - பட்ஜெட் குறித்து ரெயில் பயணிகள் கருத்து



Next Story