ஹாசனாம்பா கோவில் நடை அக்டோபர் 13-ந்தேதி திறப்பு; பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. பேட்டி


ஹாசனாம்பா கோவில் நடை அக்டோபர் 13-ந்தேதி திறப்பு; பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. பேட்டி
x

தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந்தேதி திறக்கப்படுகிறது என்று பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

ஹாசன்;

ஹாசனாம்பா கோவில்

ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தீபாவளி பண்டிகையையொட்டி திறக்கப்படுவது வழக்கம்.

இந்த கோவில் நடை அடைக்கும்போது ஏற்றப்படும் தீபம் அணையாமல் இருக்கும் என்பதும், பூக்கள் வாடாமல் இருக்கும் என்பதும் கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந்தேதி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படும் என்று ஹாசன் எம்.எல்.ஏ. பிரீத்தம் கவுடா தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

அக்டோபர் 13-ந்தேதி திறப்பு

இதுகுறித்து ஹாசனில் பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஹாசனாம்பா கோவில் நடை அக்டோபர் மாதம் 13-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் முதல் 27-ந்தேதி வரை 15 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். கடந்த 2 ஆண்டுகளாாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இதனால் மாநிலம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story