மதப்பள்ளியில் சக மாணவனை கொன்ற புதைத்த சிறுவன் - பகீர் காரணம்


மதப்பள்ளியில் சக மாணவனை கொன்ற புதைத்த சிறுவன் - பகீர் காரணம்
x

மதப்பள்ளியில் சக மாணவனை சிறுவன் கொலை செய்துள்ளான்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் நுஹ் மாவட்டம் ஷா சவுஹா கிராமத்தில் 'மதராசா' எனப்படும் இஸ்லாமிய மதபள்ளி உள்ளது. இங்கு இஸ்லாமிய மதம் தொடர்பான மத பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இதனிடையே, இந்த மதப்பள்ளியில் பயின்றுவந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் வகுப்பு முடிந்தும் வீடு திரும்பவில்லை. இதனால், சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் காணாமல் போன சிறுவன் சமீர் தான் படித்து வந்த இஸ்லாமிய மதப்பள்ளியில் கடந்த 5-ம் தேதி பிணமாக மீட்கப்பட்டான். சிறுவனின் உடல் மதப்பள்ளியில் உள்ள கீழ்தளத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, விசாரணையை தீவிரபடுத்திய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறுவனை கொலை செய்து உடலை புதைத்தது யார்? மரணத்திற்கான காரணம் என்ன? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், 11 வயது சிறுவன் சமீரை அதே மதப்பள்ளியில் பயின்றுவந்த சகமாணவனான 13 வயது சிறுவனே கொலை செய்துள்ளான் என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது.

மத பாடம் படிக்க விருப்பம் இல்லாததால் மத பள்ளிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சக மாணவனான சமீரை கொலை செய்து உடலை மத பள்ளியின் கீழ் தளத்தில் புதைததாகவும் அந்த சிறுவன் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் 11 வயது சிறுவனை கொலை செய்த 13 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


Next Story