பின்னணி பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது... கவுரவித்த கேரள அரசு..!


பின்னணி பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது... கவுரவித்த கேரள அரசு..!
x

தமிழகத்தை சேர்ந்த இவர் சுமார் 6,000 பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

சபரிமலை,

பல்வேறு பக்தி பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் பின்னணி பாடகர் வீரமணிதாசன். தமிழகத்தை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சுமார் 6,000 பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் பாடிய கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சபரி மலை ஜோதிமலை, எல்லாம் வல்ல தாயே, எங்க கருப்பசாமி போன்ற பாடல்கள் தற்போது வரை கோயில் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில், அவரது ஆன்மீக பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ஹரிவராசனம் விருதை கேரள அரசு வழங்கி உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலையில் வழங்கப்பட்டு வரும் ஹரிவராசனம் விருதை பாடகர் வீரமணிதாசனுக்கு கேரளா தேவசம் துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது.


Next Story