மூவர்ணக் கொடியுடன் கூடிய புகைப்படங்களை பகிர வேண்டும் - நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்


மூவர்ணக் கொடியுடன் கூடிய புகைப்படங்களை பகிர வேண்டும் - நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
x

இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பலர் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை இந்திய மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்றழைக்கப்படும் விடுதலை அமிர்தப் பெருவிழா என்பது 75 ஆண்டுகால சுதந்திரம் மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்கும் இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியாகும்.

மக்களின் இதயங்களில் தேசபக்தியின் உணர்வைத் தூண்டுவதே இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள யோசனை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பலர் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இல்லம் தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்திற்கு கிடைத்த அற்புதமான பதிலில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த இயக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சாதனைப் பங்கேற்பைப் பார்க்கிறோம்.

விடுதலை அமிர்தப் பெருவிழாவை குறிக்க இது ஒரு சிறந்த வழியாகும். மூவண்ணக்கொடியுடன் உங்கள் புகைப்படத்தையும் hargartiranga.com என்ற இணையதளத்தில் பகிரவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story