குஜராத்: 2 நாட்களில் ரூ.110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்


குஜராத்:  2 நாட்களில் ரூ.110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
x

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஆளில்லா குடோனில் இருந்தும் டிரமடோல் போதை மாத்திரைகள் குறிப்பிட்ட அளவில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கச்,

குஜராத்தில் போதை மாத்திரைகள் கடத்தல் பற்றி ரகசிய தகவல் கிடைத்ததும், சிறப்பு புலனாய்வு பிரிவினர் மற்றும் முந்த்ரா சுங்க இலாகா துறையை சேர்ந்த நுண்ணறிவு பிரிவினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், 26.26 லட்சம் எண்ணிக்கையிலான டிரமடோல் என்ற போதை மாத்திரைகள் கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று நேற்று நடந்த அதிரடி வேட்டையில், ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டு இருந்த மற்றொரு 42.24 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 நாட்களில் மொத்தம் ரூ.110 கோடி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதனை சுங்க இலாகா துறையினர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. சர்வதேச சந்தையில் ரூ.110 கோடி மதிப்பிலான 68 லட்சம் டிரமடோல் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதேபோன்று, ஆமதாபாத் நகரில் ஆளில்லா குடோனில் இருந்தும் டிரமடோல் போதை மாத்திரைகள் குறிப்பிட்ட அளவில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அசாமில் கச்சார் மாவட்டத்தில் ரூ.9 கோடி மதிப்பிலான 30 ஆயிரம் யாபா போதை மாத்திரைகள் கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில், தோலாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சப்தகிராம் கிராமத்தில் வசித்து வரும் அப்துல் ஆலிம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story