135 பேரை பலி கொண்ட குஜராத் பால விபத்து தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல்


135 பேரை பலி கொண்ட குஜராத் பால விபத்து தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல்
x

Photo Credit: AFP

குஜராத்தின் மோர்பியில் உள்ள மச்சூ நதி மீது கட்டப்பட்டிருந்த பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குஜராத்தின் மோர்பியில் உள்ள மச்சூ நதி மீது கட்டப்பட்டிருந்த பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். மேலும் பாலத்தை பராமரித்து வந்த ஒரேவா குழுமத்தை சேர்ந்த ஜெய்சுக் படேல் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரது முன்ஜாமீன் மனு வருகிற 1-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் பால விபத்து தொடர்பான வழக்கில் போலீசார் நேற்று மோர்பி செசன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1,200 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் சிறையில் இருக்கும் 9 பேர் மற்றும் ஜெய்சுக் படேல் என 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. மோர்பி பால விபத்தில் 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story