குஜராத் சட்டசபை தேர்தல்: ரூ.10½ கோடி பணம், நகை பறிமுதல்


குஜராத் சட்டசபை தேர்தல்: ரூ.10½ கோடி பணம், நகை பறிமுதல்
x

கோப்புப்படம்

குஜராத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.10.5 கோடி பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் 1, 5-ந்தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி அங்கு கடந்த 3-ந்தேதி முதல் மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளது.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் இதுவரை, உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 கோடி ரொக்கத்தொகையும், ரூ.6.48 கோடி மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும், தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படையினரும் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். ரூ.61 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் அங்கு ரூ.13.51 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

அதுதொடர்பாக 24 ஆயிரத்து 170 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

மொத்தம் 91 ஆயிரத்து 154 பேர், குற்றவியல் நடைமுறை விதி, மதுவிலக்கு சட்டம், போலீஸ் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story