குஜராத் சட்டசபையில் பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக தீர்மானம்
குஜராத் சட்டசபையில் பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காந்திநகர்,
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பி.பி.சி. செய்தி நிறுவனம் சமீபத்தில் ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.
இந்த நிலையில் பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக குஜராத் சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜனதா எம்.எல்.ஏ. விபுல் படேல் கொண்டு வந்த இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆவணப்படங்களை வெளியிட்ட பி.பி.சி நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்த தீர்மானம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story